காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் 188 ஏக்கர் காணியை கையளித்த இராணுவம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் 187.56 ஏக்கர் காணியை பாதுகாப்பு  படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு , அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளனர்.

பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் மாவட்ட செயலக  அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை(30) கையளித்துள்ளார்.

காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு அரச காணி 351.23 ஏக்கர் வழங்குவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள்,  குறித்த 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.