இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே நோக்கம்-ஜனாதிபதி ரணில்

இலங்கை சுதந்திரமடைந்து 100 வருடங்களை பூர்த்தி செய்யும் போது அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“2023ஆம் ஆண்டு இந்த வரவு செலவுத் திட்டத்துடன் போட்டி நிறைந்த நவீன பொருளாதாரத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் 2048ஆம் ஆண்டு சுதந்திரத்தின் 100வது ஆண்டாக இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான பின்னணியை தயார் செய்வோம்.”என்றார்.