ஊடகவியலாளர் பாலசிங்கம் சுஜீவனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு

பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என  பௌத்த மத குரு  ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியதாக தெரிவித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு

பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு அறிவிப்பில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம்  பெற்றுக் கொள்ளும்  நோக்கில் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.