ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம்: கடலில் சிக்கியுள்ள மாலுமிகள் – ஐநா தகவல்

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளதாக ஐநா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற ஈரான் நாட்டின் அச்சுறுத்தல்களால், அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்து ஏறக்குறைய முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, உல்லாசக் கப்பல்களில் இருக்கும் மேலும் 15,000 பயணிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்செனியோ டோமிங்குஸ் கூறியுள்ளார்.

உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்த ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கியமான பாதையாகும். சாதாரணச் சூழலில் உலகின் 20% எண்ணெய் விநியோகம் இந்தப் பகுதி வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.