கடல் அரிப்ப்பால் அழிந்துவரும் திருக்கோவில் பிரதேசமும் மற்றும் வளங்களும்

திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்துக்கு முன்னாலுள்ள கடல் பகுதி மற்றும் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடல் பகுதிகள் இந்த கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

கடந்த ஒரு வார காலமாக இடம் பெற்று வரும் இந்த கடல் அரிப்பில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டு இருக்கின்றன. அது போல ஏனைய மரங்களையும் கடல் காவு கொண்டிருக்கிறது சுமார் 100 அடி பரப்பு கடலுக்குள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது .

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது மீன்பிடி வள்ளங்கள் கரையை விட்டு நகர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பான திணைக்களம் மற்றும் பொறுப்பானவர்கள் கடலரிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

நன்றி-battinews