த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுமாறு ரெலோ கோரிக்கை

380 Views

ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுமாறு ரெலோ

ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுமாறு ரெலோ கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைக் கூட்டுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கோரியுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்த்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதற்கான கோரிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனுக்கு கடிதம் மூலம் இன்றைய தினம் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நீண்ட காலமாக நடைபெறவில்லை என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் முடிந்தளவு விரைவாக நாளை 05.04.2022 இக்கூட்டத்தைக் கூட்டுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஒழுங்கு செய்யுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Leave a Reply