இலங்கை : நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

418 Views

நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் இலங்கையின் ஏனைய செயற்பாடுகளை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நியமித்துள்ளார்.

தினேஷ் குணவர்தன – கல்வி அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – பெருந்தெருக்கள் அமைச்ச​ர்
அலி சப்ரி – நிதி அமைச்சர்
ஜீ.எல். பீரிஸ் – வௌிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சபை முதல்வராக தினேஷ் குணவர்தன செயற்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோர் நாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply