ஆசிரியர் தினம், தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாகப் பிரகடனம் – இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு

தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாகப் பிரகடனம்

உலக ஆசிரியர் தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடியை ஏற்றி, தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாகப் பிரகடனம் செய்வதுடன், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் இலங்கை அரச ஆசிரியர் சங்கம் பொது மக்களை  கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் 06 திகதி கொண்டாடப்பட இருக்கின்றது.

இந் நிலையில் அன்றைய தினத்தை   தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப் படுத்தி இருப்பதாக ஆசிரியர் சங்கத்தின் மூத்த துணை செயலாளர் இந்திக பரணவிதான தெரிவித்துள்ளார்.

மேலும்  பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவை ஆதரிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-150-october-03-2021