வங்கதேச பிரதமராகப் பதவியேற்ற தாரிக் ரஹ்மான்

வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச அதிபர் முகமது சாஹாபுதின் முன்னணியில் வங்கதேசத்தின் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார். புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

பிப்ரவரி 12-ஆம் தேதியன்று வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பி.என்.பி கூட்டணி 212 இடங்களில் வென்றது. ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 77 இடங்களில் வென்றமை குறிப்பிடத்தக்கது.