அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி

476059100 1055260746642928 2219616627666208754 n அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி

அவுஸ்திரேலியாவில் இன்று (4) தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில்  தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி நடைபெற்றுள்ளது.

இந்த பேரணியின் போது இனப்படுகொலை அறிக்கையொன்றும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருட இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில் இன்று அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நீதி பொறுப்புக்கூறலை கோரியதுடன்; இலங்கை அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்தும் ஒடுக்குமுறையை அனுபவிக்கும் தமிழ் அகதிகளிற்கு பாதுகாப்பை கோரியுள்ளனர்.

இந்த பேரணியின் பின்னர் அதில் கலந்துகொண்டவர்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குள் சென்று ஈழ தமிழர்களிற்கு எதிராக திட்டமிட்ட முறையில் இனப்படுகொலை முன்னெடுக்கப்படுவதை வெளிப்படுத்தும் ஆவணத்தை அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.