இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான தமிழ்த் தேசியப் பேரவையினர் , இன்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள்.
ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வாதார உரிமைகள் அடங்கிய விரிவான எழுத்துமூலக் கோரிக்கை கடிதமும் இதன்போது முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்:
சமஷ்டி அடிப்படையிலான தீர்வு: ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி (Federal) அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம்.
சர்வதேச விசாரணை: ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம்.
தொப்புள்கொடி உறவுகளின் பிரச்சினைகள்: இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள்.
அகதிகள் மறுவாழ்வு: இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு:
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் பின்வரும் 7 பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிக் குழு இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam – தலைவர், தமிழ்த் தேசியப் பேரவை; நாடாளுமன்ற உறுப்பினர். செல்வராசா கஜேந்திரன் Selvarajah Kajendren Tnpf – பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பொன்னுத்துரை ஐங்கரநேசன் Ayngaranesan Ponnudurai – தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.கே. வி. தவராசா K.v. Thavarasha – தலைவர், ஜனநாயகத் தமிழர் கட்சி; ஜனாதிபதி சட்டத்தரணி.தருமலிங்கம் சுரேஷ் Tharumalingam Suresh – தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.கனகரட்ணம் சுகாஷ் Sugash Kanagaratnam – உத்தியோகபூர்வ பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி.நடராஜர் காண்டீபன் Nadarajar Kandeepan – கொள்கைப் பரப்புச் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி.




