இலங்கை : தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல ரூ.2 கோடி செலுத்த உத்தரவு

297 Views

india takes serious note of death of indian fisherman in firing by pakistan maritime agency இலங்கை : தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல ரூ.2 கோடி செலுத்த உத்தரவு

தமிழக மீனவர்களுக்கு 2 கோடி பிணை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேருக்கு சிறை காவலை நீட்டித்துள்ள  கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றம், தலா ரூ.2 கோடி செலுத்தி பிணையில் செல்லலாம் என உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழகம் மண்டப பகுதியைச்  சேர்ந்த 4 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம்,   மீனவர்களை வரும் 21ம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான்  நீதிமன்றத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன் போது மீனவர்களை வரும் மே மாதம் 12ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், “மீனவர்கள்  பிணையில் செல்ல  விரும்பினால் இலங்கை பணம் தலா ரூ. 2 கோடி ரூபாய்   செலுத்தி பிணையில் செல்லலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த வழக்கு   வரும் மே மாதம் 12ம் திகதிக்கு மீண்டும்  திகதி யிடப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply