“கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் படுகொலை” – இந்திய நாடாளுமன்றத்தில் வைகோ குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் படுகொலை

இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் படுகொலை

இந்திய மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வைகோ, கடந்த 38 ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதுடன் அவர்களின் படகுகள் சேதப்படுத்தப் படுவதாக கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை தோற்றதால், தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தாலி கடற்படையால் கேரள மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் தலையிட்டு அவர்களின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுத்தந்ததாகவும், குஜராத் மீனவர்களை தாக்கினால் இந்திய அரசு தீவிரம் காட்டுவதாகவும் குறிப்பிட்ட வைகோ, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.