அத்துமீறும் தமிழக மீனவர்கள்- யாழில் மீனவர்கள் போராட்டம்

அத்துமீறும் தமிழக மீனவர்கள்

அத்துமீறும் தமிழக மீனவர்கள்: தமிழக மீனவர்களால் யாழ்ப்பாணம்-வடமராட்சி மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப் பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி, யாழில் இன்று மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

 வீதிகளில் படகுகள், வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பில் மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,  கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது என மேலும்  தெரிவித்துள்ளனர்.

Leave a Reply