திருகோணமலை விவகாரத்தில் பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துகள் நம்பிக்கை தரக்கூடியதாக அமைந்ததாகத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவருடைய பேச்சு பக்கச்சார்பற்ற வகையில் அமைந்ததாகவும் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் இரு தரப்பினரையும் சமாளித்துப் போக வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இல்லை என்றும் சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேர்மையான தலைவராக இந்த பிரச்சினைக்கு நேரடித் தீர்வை ஜனாதிபதி காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மோசமான இனவாதம் தூண்டப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அந்த இனவாதிகள் துறவிகளாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.



