சட்டவிரோத அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக தையிட்டி மீண்டும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையில் பௌர்ணமி தின வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு தென்பகுதியிலிருந்து  மக்கள் அழைத்து வரப்படுவது வழமை. அந்தவகையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமாகியுள்ளது.