உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-கிண்ணியாவில் கறுப்புக்கொடி போராட்டம்

IMG 20210821 WA0010 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-கிண்ணியாவில் கறுப்புக்கொடி போராட்டம்

“2019.04.21 ஆம் திகதிய உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கிரிஸ்தவ மக்களுக்கு எதுவித நீதியும் இதுவரை கிடைக்கவில்லை, உண்மையான சூத்திரதாரிகள் மறைக்கப்படுகிறார்கள், அக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என பல நிபந்தனைகளை முன்வைத்து கிறிஸ்தவ மேற் சபைகளினால் இன்று  வீடுகள் தோறும் கறுப்புக் கொடிகளை ஏற்றி போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

IMG 20210821 WA0008 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-கிண்ணியாவில் கறுப்புக்கொடி போராட்டம்

முஸ்லிம் சமூகத்தின் எந்த சம்பந்தமும் இன்றி சஹ்ரான் என்ற கொலைகார கும்பலால் அரங்கேற்றப்பட்ட இந்தத் கொடூர தாக்குதலுக்கு அநியாயமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட முஸ்லிம் சமூகமும் எமது போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக இன்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபையின் உறுப்பினருமாகிய எம். எம். மஹ்தி தலைமையில் கிண்ணியாவில் கறுப்புக் கொடிகள் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

IMG 20210821 WA0007 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-கிண்ணியாவில் கறுப்புக்கொடி போராட்டம்

கறுப்பு நிற ஆடை அணிந்து கொடியேற்றி பின்  அவர் வழங்கிய செவ்வியில்,

“பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கும், அநியாயமாக குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கும், கைது செய்யப்பட்ட  தலைமைகளுக்கும் உரிய நீதி கிடைக்கப் பெற வேண்டும். உண்மையான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.  குற்றவாளிகளே தண்டிக்கப் பட வேண்டும். என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை நடத்துகின்றோம்”   என்றார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021