இலங்கையில் பாலியல் தொழிலை சட்டமாக்கினால் தமிழ் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவர்- உமாசந்திரா பிரகாஷ்

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு

இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

பாலியல் தொழில் என்ற விடயம் புத்த பெருமானின் காலத்திலிருந்து காணப்படுவதாக தெரிவிக்கும் ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, பாலியல் தொழில் என்பது, உலகிலேயே மிக பழமை வாய்ந்த தொழில் என்றும் இத் தொழிலை  சட்டமாக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள், சிறைச்சாலைகளுக்கு செல்லாது, தமது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் எனவும்  கூறுகின்றார்.

இது குறித்து பிபிசி தமிழ் வேவைக்கு கருத்து தெரிவித்திருக்கும் பெண் சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான உமாசந்திரா பிரகாஷ், பாலியல் தொழிலை சட்டமாக்கும் பட்சத்தில், கட்டாயமாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஏனைய சமூகங்களை விடவும், பின்தங்கிய நிலையில் பெரும்பாலும் தமிழ் சமூகம் உள்ளமையினால், அந்த பெண்கள் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.

அத்தோடு பொருளாதார ரீதியில் தம்மையும், தமது குடும்பத்தையும் வலுப்படுத்த அந்த பெண்கள், இவ்வாறான தொழில்களில் ஈடுபடக்கூடும் என்றும் அவர் அச்சம் வெளியிடுகின்றார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad இலங்கையில் பாலியல் தொழிலை சட்டமாக்கினால் தமிழ் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவர்- உமாசந்திரா பிரகாஷ்