சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு -மைத்திரிபால சிறிசேன

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று மாதங்களுக்கு முன்னர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் இரண்டு தடவைகள் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஆதரவை வழங்குவது தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்பதற்கு அறிவிக்கப்படும் தேர்தலை அறிவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News