கனடாவில் பெறப்பட்ட 20 கோடி ரூபா எங்கே?“-தமிழரசுக் கட்சி மகளிர் அணி அணி

கனடாவில் இருக்கும் தமிழர்களால் தாயகத்தில் உள்ள ஏழை மக்களின் புனர்வாழ்வுக்காக அனுப்பபட்ட 20 கோடி ரூபா நிதி எங்கே? இதனைக் கேட்பவர்கள் சுமந்திரனின் மாற்று கட்சியினர் அல்ல. மாறாக சுமந்திரனின் தமிழரசுக்கட்சி மகிளிர் அணியினரே கேட்கின்றனர்.
பணம் கனடாவில் இருந்து வந்ததை திருகோணமலை தமிழரசுக்கட்சி வேட்பாளர் குகதாசன் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.பணம் தானே பெற்று வந்ததாக சுமந்திரனும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் பணம் தன்னிடம் தரப்படவும் இல்லை. பணம் எங்கே என்று தனக்கு தெரியவில்லை என்று தமிழரசுக்கட்சி பொருளாளர் கூறுகிறார்.
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பணத்தை சிலர் சுருட்டிவிட்டனர் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் சுமந்திரன் இந்த 20 கோடி ரூபா பணத்தை சுருட்டியவர் யார் என்று கூறுவாரா?
கடந்த 5 நாளில் 79 சந்திப்புகளை தான் நிகழ்த்தியதாக சுமந்திரன் பெருமையாக கூறுகிறார். அதில் ஒரு சந்திப்பிலாவது இந்த பணம் எங்கே என்பதை ஏன் அவரால் கூற முடியவில்லை?
குறிப்பு – கனடாவில் இருந்து வந்த 20 கோடி ரூபாவுக்கும் கணக்கு இல்லை. இந்திய தூதரிடம் இருந்து பெறும் தேர்தல் நிதிக்கும் கணக்கு இல்லை. இந்த லட்சணத்தில சுமந்திரன் நேர்மையானவர், என்ற பில்டப்பிற்கு குறைவில்லை.