இலங்கையில் சீரற்ற கால நிலை- நெருக்கடியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள்

272 Views

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

விடைத்தாள்கள் நனைந்துள்ளதால் சில மாணவர்கள் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் நேற்றைய சீரற்ற காலநிலையை கருத்திற்க் கொண்டு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என ஒன்றியத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்திரக்கலை மாணவர்களின் கலைப் படைப்புகள் உலராமல் இருப்பதால் அவர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும்  பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply