மட்டு:கர்பலா அல்மனார் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி மாணவர்கள் போராட்டம்

பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி மாணவர்கள் போராட்டம்

மட்டு:கர்பலா அல்மனார் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி மாணவர்கள் போராட்டம்: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள கர்பலா அல்மனார் வித்தியாலய அதிபரை உடனடியாக பாடசாலையை விட்டு இடமாற்றுமாறு கோரி, மாணவர்களும் பெற்றார்களும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் அதிபர், மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். இங்கு வருகை தந்தை காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர் மௌலானாவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கையின் கீழ், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரமீஸ் தலைமையில் பாடசாலைக்கு வருகை தந்த அதிகாரிகள் குழு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

WhatsApp Image 2021 11 29 at 10.16.30 மட்டு:கர்பலா அல்மனார் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி மாணவர்கள் போராட்டம்

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், மூன்று வாரங்களுக்குள் இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடமும் தனித்தனியாக அதிபருக்கு எதிராக முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களையும் எழுத்து மூலம் பெற்றுக்கொண்டனர்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மட்டு:கர்பலா அல்மனார் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி மாணவர்கள் போராட்டம்