இலங்கையில் போராட்டம்: பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கிச் சூடு – முப்படைகளுக்கு அரசு அனுமதி

சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கிச் சூடு

சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கிச் சூடு

இலங்கையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்தார்.

இதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர்  பாதுகாப்புடன் விமான படையின் உதவியுடன்   திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில்,திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், திருகோணமலையில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் அல்லது தனிநபர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அரசு அனுமதித்துள்ளது.

இலங்கையில் இன்று காலை 10 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகள் கடுமையான சேதம் அடைந்துள்ளன என காவல்துறையின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றில் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த கால பகுதியில் 88 வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tamil News