பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

pro 2 1 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!,  அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, கொரோனா திரை மறைவில் எங்களை வதைக்கதே, உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்! உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

Leave a Reply