சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதற்கு இலங்கையின் தலைமை அவசியம்-அமெரிக்கா

சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதற்கு இலங்கையின் தலைமை அவசியம் என  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்  கூறியுள்ளார்.

தூதுவர் ஜூலி சங்,   தென் மாகாணத்துக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தையும் இன்று மேற்கொண்டார்.

இந்நிலையில்,கடல் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் கடத்தலைத் தடுப்பது உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவை இன்று சந்தித்ததாக சங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.