வெளிநாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை  தீர்மானம்

தூதரகங்களை தற்காலிகமாக மூட

வெளிநாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகம், ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை தூதரகம் ஜேர்மனியின் பிராங்பேர்டிட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோவிசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்களை எதிர்வரும் 31ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டலுவல்கள் அமைசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.