வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்கள்  நாடு திரும்பினர்

வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மியன்மாருக்கு கடத்தப்பட்ட ஆறு இலங்கையர்கள்  அங்கிருந்து பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பிஅனுப்பப்பட்டுள்ளனர்.

மியன்மாருக்கு கடத்தப்பட்ட ஆறு இலங்கையர்கள் அங்கு சிக்குண்டிருந்தநிலையில் மியன்மார் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக  மியன்மாருக்கான  இலங்கைதூதரகத்திடம்  ஒப்படைக்கப்பட்டனர் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின்  வேண்டுகோளை தொடர்ந்தே  மியன்மார் அதிகாரிகள் அங்கு சிக்குண்டிருந்த இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தென்கிழக்காசிய நாடுகளில் இயங்கும் திட்டமிட்ட ஆள்கடத்தல்கும்பலிடம் சிக்கிய இலங்கையர்களே மீட்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை அவர்கள் பாங்கொக் மூலம் கொழும்பிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் வந்து சேர்ந்தனர்.