இலங்கை மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்-உலக உணவுத் திட்டம் 

இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் (37 வீதம்) தற்போது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உலக உணவுத் திட்டம்  எச்சரித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் தனது அண்மைய அறிக்கையை முன்வைத்து, “இலங்கையிலுள்ள பத்தில் எட்டு குடும்பங்கள், மற்றவர்களிடம் உணவைப் பிச்சையெடுப்பது, உணவைக் கடனாகப் பெறுவது மற்றும் அன்றாட உணவுக்காக உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது உள்ளிட்ட மாற்று வழிகளைக் கையாள்வதாகக் காட்டுகிறது.

இலங்கையிலுள்ள குடும்பங்களில், ஆண் தலைமைத்துவக் குடும்பங்களை விட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், தோட்டங்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது.

ஒட்டுமொத்த நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியானது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என உலக உணவுத் திட்டம் மேலும் குறிப்பிட்டுள்ளது.