திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள்12வது நாளாக உண்ணாவிரதம் – 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள்

தமிழகம்-திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுதலை செய்யக்கோரி 12வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 20ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினால், டிளச்சன், கபிலன், எப்சிபான், தினேஷ் ஆகிய 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil News