சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பிரதமர் ரணில் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடல் நேற்று   இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து, இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம், பணியாளர் மட்டத்திலான உடன்படிக்கையை முடிவு செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  இந்த பேச்சு வார்த்தையின் போது சும்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்திவதற்கான நிதி அளிப்பது (பிரிட்ஜிங் நிதி) தொடர்பான பேச்சுவார்த்தைகள், இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் அளவிலான உடன்படிக்கையை நம்பியிருப்பதாகவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவிகளை வழங்க தமது விருப்பத்தை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tamil News