இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸ் கடற்பரப்பில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டமையினால் தீயிட்டு எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி மீனவர்கள் 6 பேருடன் வென்னப்புவ கடலில் இருந்து பயணித்த இஷானி 1 என்ற மீன்பிடி படகு கடந்த 30 ஆம் திகதி சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது
சர்வதேச கடல்எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கை மீனவப்படகொன்று இலங்கை மீனவர்கள் 6 பேருடன் வெற்றிகரமாக கைற்றப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவு தெரிவித்திருந்தது
இதனையடுத்து குறித்த மீனவப்படகினை தீயிட்டு எரிப்பதற்கு சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது
நாட்டின் இறைமை மற்றும் கடல்சார்சுற்றுச்கூழலை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீஷெல்ஸ் பாதுகாப்பு பிரிவு அறிக்கையின் ஊடாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சீஷெல்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் பல நாள் மீன்பிடி இழுவைப் படகு அழிக்கப்பட்டது மற்றும் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்துமாறு அகில இலங்கை இழுவைப் படகு உரிமையாளர்கள் சங்கம் சர்வதேச அமைப்புகளையும் இலங்கை அரசாங்கத்தையும் கோரியுள்ளது.



