பாகிஸ்தானில் இலங்கை பிரஜை கொலை: குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க மனோ கோரிக்கை

184 Views

பாகிஸ்தானில் இலங்கை பிரஜை

பாகிஸ்தானில் இலங்கை பிரஜை கொலை செய்தவர்களிற்கு அதிவேக சட்டநடவடிக்கை மூலம் உச்சபட்ச மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ட்விட்டர் பதிவில்   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சியால்கோட்டில் இலங்கை நிர்வாக அதிகாரி பிரியந்த குமாரவை அடித்து, எரித்து, கொலை செய்த அடிப்படைவாத கும்பலுக்கு, குறிப்பிட்ட காலவரைக்குள், அதிவேக சட்ட நடவடிக்கை மூலம், உச்சபட்ச மரண தண்டனை வழங்கப்படுவதை தவிர எதுவும் எங்களை ஆறுதல் படுத்தாது மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்

அதே நேரம் இலங்கை ஜனாதிபதியை சந்தித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

இதையடுத்து தனது ட்விட்டர் பதிவில் “இலங்கை பிரஜை பாக்கிஸ்தானில் நாட்டில் கொல்லப்பட்டமை குறித்த எனது நாட்டின் சீற்றத்தையும் அவமானத்தையும் தெரிவிப்பதற்காக இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்.100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களிற்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தேன் என இம்ரான்கான்  பதிவிட்டுள்ளார்.

இந்நிழைலயில்,பாக்கிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜையின் மனைவி தனது கணவரின் கொலைக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜை கொலை

இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் இன்று ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன மீது   இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக  கூறி வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply