தமிழகை கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு

கரை ஒதுங்கிய இலங்கை படகு

கரை ஒதுங்கிய இலங்கை படகு

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில், மர்மமான முறையில் இலங்கையைச் சேர்ந்த   படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்தப் படகு இலங்கை கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமானது எனவும் அந்தப் படகில் நேற்று காலை நித்தியானந்தன் (34) என்பவர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றதாகவும் அவர் கரை திரும்பாததால் படகின் உரிமையாளர் ரவிச்சந்திரன் மீன்பிடிக்கச் சென்ற மீனவரை படகுடன் காணவில்லை கண்டுபிடித்துத் தருமாறு, கிளிநொச்சி மீன்வளத் துறை மற்றும் கிராஞ்சி காவல் நிலையத்தில்  முறையிட்டுள்ளதாக  தெரிய வருகின்றது.

மேலும் நித்யானந்தான் இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரின் போது அகதியாக தமிழகம் வந்து சேலம் அகதிகள் முகாமில் 2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தங்கி இருந்ததாகவும் பின் விமானம் மூலம் இலங்கை சென்று மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும் படகின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில்,இலங்கையில் இருந்து படகில் சட்டவிரோதமாக அந்நிய நபர்கள் யாரும் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளனரா என தமிழக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கடற்கரை கிராமங்களில் சோதனை செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil News