264 Views
இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை இலங்கை உரிய நேரத்தில் செலுத்தும் என பங்களாதேஷ் நம்புவதாக அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் வெளிநாட்டு செய்திச் சேவைகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன் செலுத்த வேண்டும்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்ததாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனையின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொகையை மீளச் செலுத்துவதற்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக கடன் காலம் இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.