ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை பகைத்துக்கொண்டால் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படும்

போர் குற்றச்சாட்டுகளில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிய வேளையில் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை பகைத்துக்கொண்டால் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படும் என, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

“ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தடுத்துவைக்கப்பட்ட செயற்பாட்டில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இலகுவாக கையாள வேண்டிய ஒரு விடயத்தில் அரசாங்கம் தூரநோக்குடன் சிந்திக்காது போயுள்ளமை ஆரோக்கியமான விடயம் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஏரோஃப்ளோட் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இலங்கையுடன் எந்த பிரச்சினையும் இல்லை, அவர்களுக்கும் அயர்லாந்து விமான நிலையத்திற்கும் இடையிலேயே கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ளது. இலங்கை இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இலங்கைக்கு இதில் எந்த நட்டமும் ஏற்படவில்லை, பாதிப்பும் ஏற்பட்டதாக கூறவும் முடியாது. எனவே, இந்த விடயத்தில் இலங்கையின் தலையீடு என்பது அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

Tamil News