இலங்கை – தாய்லாந்துக்கிடையே மீண்டும் வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தை

100 Views

இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை – தாய்லாந்து இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பில் மேலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் அந்தத் திட்டத்தால் வெளியிடப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply