மத்திய – கிழக்கு போரால் இலங்கைக்கு நிதியிழப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளது.

இதன் விளைவாக, சுற்றுலாத் துறை மார்ச் மாதத்தில் சுமார் 85 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. அதன்படி, 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 19.76 சதவீதம் குறைந்துள்ளது.

2025 மார்ச் மாதத்தில் 2 இலட்சத்து 29 ஆயிரத்து298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 979 ஆகக் குறைந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்படி, இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 40 ஆயிரத்து 634 ஆகும்.