சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை முன்கூட்டியே சென்றிருத்தல் வேண்டும்-மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

BBC செய்தி சேவைக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வௌியிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்தியமை தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்திற்குள் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டொலர் உதவியை இலங்கை எதிர்பார்த்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக கடந்த மாதமே இலங்கை தனது வௌிநாட்டு கடனை செலுத்தாதிருந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

இலங்கையின் சிறந்த நண்பன் என்ற வகையில் சீனா, ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கும் என தாம் நம்புவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

Tamil News