மருந்துகளைக் கொள்முதல் செய்தல் மற்றும் சாத்தியமான கொள்முதல் பொறிமுறையின் அடிப்படையில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் ஆதரவை இலங்கை நாடியுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நேற்று இந்தியாவின் சுகாதார அமைச்சர் Mansukh Mandaviya வைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
இலங்கையின் சுகாதாரத் துறைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
“இலங்கை இறக்குமதியாளர்கள் இந்தியாவிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும் செயல்முறை, கொள்வனவுக்கான தற்போதுள்ள இந்தியக் கடனை திறம்பட மற்றும் திறமையாக பயன்படுத்துதல், மருந்துகள் மற்றும் இந்தியாவிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.