பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தற்போது மீண்டுள்ளது

பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவிகள் மூலம் இலங்கை அதன் முடங்கியிருந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொருளாதார  ஆய்வு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான திணைக்களத்தின் ஆலோசகர் கணேசன் விக்கினராஜா தெரிவித்துள்ளார்.

இலண்டனிலுள்ள வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் அதிக கடனை சுட்டிக்காட்டி, தவறான பொருளாதார கொள்கையென விமர்சித்தனர்.