பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்ப சபாநாயகர் தீர்மானம்

107 Views

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடலில் Zoom ஊடாக பிரதமரும் பராாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்ப சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக ரவூப் ஹக்கீமின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம், சபாநாயகர் ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply