ஸ்பெயின்: மழை வெள்ளத்தினால்  90க்கும் மேற்பட்டவர்கள் பலி

ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் பெரும் இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ள பெரும் மழை வெள்ளத்தினால்  இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய்கிழமை காலை ஸ்பெயினின் வானிலை அவதான நிலையம் வலென்சியாவில் மழை வெள்ளம் குறித்து எச்சரித்திருந்தது.

கவும் அவதானமாகயிருங்கள் கடும் ஆபத்துள்ளது மிகவும் அவசரமான தேவையென்றால் மாத்திரம் போக்குவரத்தை மேற்கொள்ளுங்கள் என சமூக ஊடகத்தில் எச்சரித்திருந்த வானிலை அவதான நிலையம்  பின்னர் ஆகக்கூடிய சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது.

அன்று முழுவதும் பல தடவைகள் எச்சரிக்கைகள் வெளியாகியிருந்தன,மக்கள் ஆறுகள் காணப்படும் பகுதியை நோக்கி செல்வதை  தடுக்கவேண்டும் என உள்ளுர் அதிகாரிகள் எச்சரிகப்பட்டார்கள்.

3 மணியளவில் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் லாபுளுன்டே உடில் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளம் காணப்படுவதை காண்பிக்கும் படங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தது.

சிறிதுநேரத்தின் பின்னர் அந்த பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரிப்பதாகவும் மக்கள் ஆற்றங்கரையோரங்களில் இருந்து வெளியேறவேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவநிலையம் வேண்டுகோள் விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.