காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தொடர்பான ஞாபகார்த்தமான ஆவணங்கள் எனப்படும் ஆவணங்களை தென்னாபிரிக்க அரசு அனைத்துலக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள் ளதாக அது கடந்த செவ்வாய்க் கிழமை(10) தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தொடர் பான ஆவணங்களை அடுத்த மாதம் தென்னாரிக்கா அரசு நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. ஆபிரிக்கா பிராந்தியத்தில் பொருளாதாரத்தில் முன்னனி வகிக்கும் தென்னாபிரிக்கா அரசு இஸ்ரேலுக்கு எதிரான வழக்கை கடந்த வருடம் அனைத்துலக நீதிமன்றத் தில் தொடுத்திருந்தது.
இஸ்ரேலுக்கு எதிரான தீர்ப்பு வரும் வரையிலும் இந்த வழக்கை தொடரப்போவதாக சிறில் ரமபோசா தலைமை யிலான தென்னபிரிக்கா அரசு தெரிவித்துள் ளது. பாலஸ்தீனத்தின் சுதந்திரத் திற்கு தனது வலுவான ஆதரவுகளை தெரிவித்துவரும் தென்னரிக்கா, பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை முற்றாக அழிக்க மேற்கு ஜெருசலம் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கின் பின்னர் காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரபா பகுதி மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என ஐ.நாவின் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது. எனி னும் வழமைபோல இஸ்ரேல் அதனை மதிக்க வில்லை.
நிக்கரகுவா, பலஸ்த்தீனம், துருக்கி, ஸ்பெயின், மெக்சிகோ, லிபியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் இந்த வழக்கில் தென்னாபிரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தன. இந்த வழக்கை தொடரவேணும் என்றால் தென்னாபிரிக்கா எதிர்வரும் மாதம் 28 ஆம் நாளுக்கு முன்னர் தனது ஆதாரங்களை சமர்ப்பித்து மீண்டும் வாதங்களை ஆரம்பிக்க வேண்டும் என அனைத்துலக நீதி மன்றம உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே இந்த வழக்கை கைவிடும் படி தென்னாபிரிக்காவின் புதிய கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இஸ்ரேலிய அரசு அமெரிக்காவின் காங்கிரஸ் சபைக்கு அழுத்தங்களை கொடுத்துவருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.