ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு இரத்ததான முகாம் பருத்தித்துறையில் முன்னெடுப்பு!

WhatsApp Image 2026 11 18 at 3.06.47 PM 2 ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு இரத்ததான முகாம் பருத்தித்துறையில் முன்னெடுப்பு!

பருத்தித்துறை இரத்தவங்கியில் ஏற்பட்டுள்ள கடும் குருதித்தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் ஹாட்லியின் மைந்தர்களின் நினைவு இரத்ததான முகாம் நேற்று முன் தினம் (17) பருத்தித்துறையிக் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி – இன்பர்சிட்டி கடற்பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த ஹாட்லிக் கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களான பூரணமூர்த்தி கந்தர்வன், சிவநாதன் இரவிசங்கர், சுந்தரலிங்கம் சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன் பிரதீபன் ஆகிய நான்கு பேரின் 27 ஆம் ஆண்டு மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மரியரட்ணம் குணரட்ணம் அவர்களின் 22 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இவ் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படிருந்தது.

ஹாட்லிக் கல்லூரி மற்றும் ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் இரத்ததான முகாமானது ஹாட்லிக் கல்லூரியில் நேற்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் இடம்பெற்றது.

WhatsApp Image 2026 11 18 at 3.06.47 PM 3 ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு இரத்ததான முகாம் பருத்தித்துறையில் முன்னெடுப்பு!

பருத்தித்துறை இரத்த வங்கி மருத்துவர் சந்திரகாந்த் தலைமையிலான மருத்துவ குழுவினரது பங்கேற்பில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட தன்னார்வ குருதுக்கொடையாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று குருதிக்கொடை வழங்கியிருந்தனர். முன்னதாக ஹாட்லியின் மைந்தர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் ஆகியிர் பங்கேற்று தொடக்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.