சமூக சீர்கேட்டு நடவடிக்கை – யாழ்ப்பாணம் நகரில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனை

190 Views

சமூக சீர்கேட்டு நடவடிக்கை

யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் சமூக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து இன்றைய தினம் யாழ் மாநகர சபை அதிகாரிகளினால் திடீர் ப‌ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சில விடுதிகளில் சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இதில் சில விடுதிகளில் நடைபெற்ற  முறையற்ற விடயங்கள் கவனத்திற்கு எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

Tamil News

Leave a Reply