இலங்கையில் துப்பாக்கிச் சூடு
இலங்கையில் பாணந்துறை, பேருவளை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் நடைபெற்ற இந்த துப்பாக்கி பிரயோகங்கள் இன்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த இருவேறு துப்பாக்கி பிரயோகங்களும் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.