பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஜெயக்குமார்

விவேகானந்தநகர்  கிராம அபிவிருத்தி சங்கம் , கரைச்சி பிரதேசத்துக்குட்பட்ட கிராம  மற்றும்  மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் என்பவற்றின் தலைவரும், கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கம், கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் உபதலைவரும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கரைச்சிக் கோட்டக் கிளையின் செயலாளருமான திரு.கறுப்பையா ஜெயக்குமார் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால்(TID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (27) பரந்தனில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட இவர், ஏறத்தாழ மூன்று மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

கனகபுரம் துயிலுமில்ல மாவீரர் பணிக்குழுவின் தலைவரும் அதிபருமான தங்கவேலு கண்ணபிரான், செயலாளர் வீரவாகு விஜயகுமார் ஆகியோர் ஏற்கனவே  பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அப் பணிக்குழுவின் பொருளாளரான கறுப்பையா ஜெயக்குமாரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.