தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 20 ம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் (சி.ரி.ஜ.டி) காரியாலயத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தமிழ் கட்சியின் தேசிய அமைப்பாளரின் வீட்டிற்கு நேற்று சென்ற பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினர் தேசிய அமைப்பாளர் அங்கு இல்லாத நிலையில் அவரின் பெற்றோருடன் அவரை எதிர்வரும் 20 ம் திகதி கொழும்பு -5 உள்ள கிருளப்பனை பேஸ்லைன் வீதியிலுள்ள குறித்த காரியாலயத்திற்கு விசாரணைக்கு வருமாறு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளராகவும் செயற்பட்டுவரும் சு.நிசாந்தன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.