விமர்சனங்களால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது என்னாலும் மேடைகளில், ஊடகங்களில் விமர்சிக்கலாம் ஆனாலும் எதையும் பெற முடியாது சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் அப்போதுதான் உரிமைகளை வென்றெடுக்க முடியும். என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கிண்ணியா பூவரசந் தீவு பகுதியில் வடசல் பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தமிழ் கூட்டமைப்பு 60 வருடங்களாக பேசுகிறது ஆனாலும் அப்பாவி மக்களுக்கான அபிவிருத்திகள் எதுவும் நடைபெறவில்லை.
மக்கள் தேவைகளை அறிந்து பேச வேண்டும் வெருமென உரிமைகளை மாத்திரம் பேசுவதில் பலனில்லை உரிமைகளை கட்டாயம் பேசத்தான் வேண்டும் பேச்சில் மாத்திரமல்லாது சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் இதனை வென்றெடுக்க வேண்டும்.
சுமார் மூன்று வருட காலமாக மாகாண சபை ஆளுனரின் கீழ் நிருவாகம் செயற்படுகிறது.எதிர் வரும் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெறும் கடந்த முறையும் தனித்தே போட்டியிட்டு இரு உறுப்பினர்களை பெற்றோம் 90 வீதமான முடிவு தனித்து போட்டியிடுவதே தீர்மானமாக உள்ளது.
இத் தேர்தல் விகிதாசார முறையில் நடாத்துவதன் ஊடாக சிறுபான்மை சமூகத்திற்கான சாதகமான பதிலை பிரதிநிதிகள் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும் .முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் உயர்பீடமே தீர்மானிக்கும் தலைவர் றவூப் ஹக்கீம் ஊடான தீர்மானத்தை அந்த காலகட்டத்தின் போது தீர்மானங்களை எடுப்போம்” என்றார்.