ஆறு மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயினால் மரணம்

கோவிட்-19 நோயினால் மரணம்

ஆறு மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயினால் மரணம்

கோவிட்-19 நோயினால் இதுவரையில் 6 மில்லியன் மக்கள் உலகம் எங்கும் பலியாகியிருப்பதாக ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தனது புள்ளி விபரங்களில் தெரிவித்துள்ளது.

இந்த நோயின் தாக்கம் குறைவடைந்துள்ளபோதும், அது இன்னும் முற்றாக அழிவடையவில்லை. சில நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளபோதும் நோயினால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

நோயினால் மரணமடைபவர்களில் தடுப்பூசி போடாதவர்களே அதிகமாக உள்ளனர் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிக்கி பங் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது. ஹொங் ஹொங் நாடு தற்போது கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. அங்கு இறப்பு விகிதமும் அதிகமாகவே உள்ளது.

 

போலந்து, ஹங்கோரி, ருமேனியா உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இறப்பு விகிதம் தற்போதும் அதிகமாகவே உள்ளது. பொருளாதார வளம் மற்றும் தடுப்பூசி போன்றவை அதிகமாக இருந்தபோதும் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதல் ஏழு மாதங்களில் ஒரு மில்லியன் மக்கள் மரணமடைந்தபோதும், அதன் பின்னர் நான்கு மற்றும் மூன்று மாதங்களில் ஒரு மில்லியன் மக்கள் பலியாகியிருந்தது கவனிக்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

Tamil News